×

கடந்த 24 மணி நேரத்தில் கொள்ளிடத்தில் 7 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டம் குடிதாங்கி, மதுரை மாவட்டம் சாத்தியால் தலா 5 செ.மீ. மழை பதிவு, கோவை மாவட்டம் ஆழியாரில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது. குமரி சிவலோகம், பெருஞ்சாணி அணை, உதகை கிளென்மார்கன், வால்பாறை உள்பட 13 இடங்களில் 3 செ.மீ. மழை. தேனி மாவட்டம் வீரபாண்டி, கூடலூர், பெரியகுளம், கோவை பெரியநாயக்கன்பாளையம் உள்பட 12 இடங்களில் தலா 2 செ.மீ மழையும், உதகை, பரலியாறு, ஜெயங்கொண்டம், மதுரை, மேட்டுப்பாளையம் உள்பட 28 இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post கடந்த 24 மணி நேரத்தில் கொள்ளிடத்தில் 7 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Mayiladuthurai district ,Chennai Meteorological Department ,Cuddalore district ,Madurai district ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...